வீடியோ விவகாரம்.... நான் அவன் இல்லை: பார் நாகராஜின் புது விளக்கம்!!!

nagaraj
Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (12:30 IST)
வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும் வெறும் அடிதடியில் மட்டுமே தான் ஈடுபட்டு வந்ததாகவும் இந்த விஷயத்திற்கும் தமக்கும் சம்மந்தமில்லை எனவும் பார் நாகராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளான்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
producer
 
இவ்வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜன் என்பவன் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தான். இவன் பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறான். பைனான்ஸ் தொழிலுடன், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தான். இந்த விவகாரத்தால் அதிமுகவில் இருந்த இவனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியது கட்சி மேலிடம்.
dismiss
 
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜன் மீது கடுமையான கோபம் கொண்ட பொள்ளாச்சி மக்கள், நேற்று பார் நாகராஜன் நடத்தி வரும் பாரில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதற்கிடையே நேற்று வெளியான வீடியோவில் பார் நாகராஜன் இருந்ததாக கூறப்பட்டது. போலீஸார் வேண்டுமென்றே இவ்வழக்கில் பார் நாகராஜை தப்பிக்க விட்டதாக மக்கள் கூறினர்.
pollachi 2
 
இதற்கிடையே தலைமறைவாக உள்ள பார்நாகராஜ், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளான். அதில் அந்த வீடியோவில் இருப்பது நானே இல்லை. அது சதீஷ். என் மீது அடிதடி வழக்குகள் மட்டுமே உள்ளது. அடிதடி வழக்குகள் குறித்து விசாரணைக்கு அழைத்தால் நான் ஆஜராக தயார் என கூறியுள்ளான். இது பொள்ளாச்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :