ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (13:02 IST)

ஆற்றில் குதித்து கண்ணீர் விடுகின்ற போராட்டம் நடைபெறும்-பாஜகமாநில விவசாய பிரிவு தலைவர்!

தாராபுரம் அமராவதி ஆற்று பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் படித்துறையில் உள்ள அமராவதி ஆற்றை பார்வையிட்ட பாஐக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ்  கூறியதாவது......
 
கேரளாவில் ஏற்பட்டுள்ள  நிலநடுக்கத்தால் எராளமானோர் உயிரிழந்துள்ளனர் இந்த துயர சம்பவத்திற்கு  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
 
மேலும்  பாஜக சார்பாக குழு அமைத்து நிவாரண பணிகளை துவக்கி உள்ளோம்.
 
தமிழகத்தில் இயற்கையின் சீற்றத்தால் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டுள்ளது. காவிரி , பவானி, ஆற்றில்வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது.
 
அமராவதி ஆற்றில் சென்ற நீர் கடந்த மூன்று நாட்களாக வீனாகி 3 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
 
அவிநாசி அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் 99 சதவீதம் பணிகள் முடிந்தும் கூட இன்று வரை திட்டத்தை துவக்காமல் தழிழக அரசு மெத்தனத்தை காட்டி வருகிறது. இன்று காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. 
 
ஆனால் கொங்கு மண்டல பகுதியிலே திருப்பூர், ஈரோடு, கோயமுத்தூர் ,நீலகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் குளம், குட்டைகள் காய்ந்து கிடக்கின்றன
 
இங்கு உள்ள உப்பாறு அணை, நல்லதங்காள் அணை , வட்டமலை கரை அணை ,சின்னக்கரை ஓடைகள் தண்ணீர் இன்றிவுள்ளது.குளம் குட்டைகள் எல்லாம் காய்ந்து கிடக்கிறது .பாஐக  தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக விவசாயிய பிரச்சனைகளை முன்னெடுத்து பல போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளோம் .
 
நல்ல தங்காள் நீர்த்தேக் அணையும், வட்டமலை கரை அணையும், உப்பாறு அணையையும் மோட்டார் மூலமாக பைப் லைன் வைத்து அமராவதி ஆற்றில் இருந்து அதன் மூலமாக நீரை எடுத்து உப்பாறு உள்பட இப்பகுதிஅணைகளை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
 
5 டிஎம்சி தண்ணீர் இருந்தால் உப்பாறு அணை முழுமையாக நிறைந்து விடும்.
 
2 1/2 டிஎம்சி தண்ணீர் இருந்தால் நல்லதங்காள் அணை நிரம்பி விடும்.இதனால் ஏறக்குறைய 10,ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் .
 
ஆனால் இதைப் பற்றி திமுக அரசு கவலைப்படாமல் தொடர்ச்சியாக மழைக்காலங்களில் வெள்ள நிவாரணம், வறட்சி காலங்களில் வளர்ச்சி நிவாரணம் என்று கொடுத்துக்கொண்டு தமிழக மக்களை குறிப்பாக விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டோம்.
 
அமராவதியில் பைப் லைன் மூலமாக ஒரு பம்பிங்  ஸ்டேஷன் அமைக்க 
 
ஜல் சக்தி திட்டத்தில் மத்திய அரசு நிதி கொடுக்க தயாராக உள்ளது.  கேட்டால் நிதியை மத்திய அரசு கொடுத்து விடும் ஆனால் தமிழக அரசின் மெத்தனம் எதையும் கண்டு கொள்ளாத போக்கு தாராபுரத்தை வறட்சி பகுதியாக மாற்றிக் கொண்டுள்ளது .விவசாயிகளின் நலன் கருதி பம்பிங் ஸ்டேசன் அமைக்க அறிவிக்க வேண்டும்.
 
இல்லாவிட்டால் மூன்று நாட்களில் விவசாயிகளை ஒன்று திரட்டி அமராவதி ஆற்றிலே தண்ணீரில் குதித்து கண்ணீர் விடுகின்ற போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
 
இதை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை .முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் .
 
அதேபோல் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு உள்ளார்கள் லட்சம் டிஎம்சி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. கபினி அணை நிரம்பியுள்ளது, கீழ்பவானி அணையின் நம்பியுள்ளது, அத்திக்கடவுக்கு வரக்கூடிய அணை நிரம்பி விட்டது. ஆனால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. நீர் மேலாண்மைக்காக தமிழக அரசு என்ன செய்துள்ளது என கேட்டுள்ளது உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. அனைத்தும் செய்து கொண்டுள்ளோம் என கூறுகிறார்கள் ஆனால் இங்கு சாட்சியாக நீர் கடலிலே கலந்து கொண்டுள்ளது. எனவே தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம். தயவு செய்து கடலிலே தண்ணீர் கலப்பதை கண்ணீரோடு பாருங்கள் மக்கள் வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிறார்கள், விவசாயிகள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய போராட்டம் தொடங்கும் முன்பு ஒரு நல்ல செய்தியை திராவிட முன்னேற்றக் கழக அரசிடம் எதிர் பார்க்கிறோம் இதுவே எங்கள் கோரிக்கையாக வைக்கிறோம்இவ்வாறு நாகராஜ் கூறினார்.