வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (21:18 IST)

ஆன்லைனில் சினிமா டிக்கெட்டுகள் விற்பனைக்கு ஆதரவு குவிகிறது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சிக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை டிக்கெட் விலையை உயர்த்தி திரையரங்கினர் விற்பனை செய்து வருவது தெரிந்ததே. அதேபோல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் ஒன்றுக்கு ரூ.30 வரை சேவைக்கட்டணம் பெறப்படுகிறது. மேலும் பார்க்கிங் முதல் தியேட்டரில் விற்கும் திண்பண்டங்கள் வரை இஷ்டத்திற்கு அவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'விரைவில் ஆன்லைனி மட்டுமே சினிமா டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் அரசு நிர்ணயித்த விலையில் அரசின் செயலி மூலமே இனி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்
 
அதுமட்டுமின்றி திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களின் விலையையும் ஒழுங்குபடுத்த பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அதன்படி செயல்படுத்தி வருவதாகவும், சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதுடன், அதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டு, அதுவும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
 
இந்நிலையில்   திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், இன்று, சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசினர்,
 
இதில் திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளம் சார்பாக , அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன் ஆகியோரும், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்  மற்றும் இயக்குநர் சங்கம் சார்பில் ஐசரி கணேஷ் , பாரதிராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் , ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால், என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் ? அதை எவ்வாறு சரிசெய்வது போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் , அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
ஆன்லைன் மூலம் திரையரங்குகளில், சினிமா  டிக்கெட்டுகளை  தமிழக அரசின் செயலியில் மட்டுமே முன்பதிவு செய்வதற்கு ஆதரவு கூடியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த ஆலோசனை கூட்டம் மீண்டும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
ஆன்லைனில் அரசின் செயலியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டால் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.