வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (09:59 IST)

வாட்ஸ் அப் மூலம் கட்சி நிர்வாகியை நீக்கிய தீபா!

ஒரு அரசியல் கட்சியில் இருந்து அக்கட்சியின் நிர்வாகியை நீக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. செயற்குழு, பொதுக்குழு கூடி ஒரு முடிவு எடுத்த பின்னர் சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கேட்டு அதன் பின்னரே கட்சியில் இருந்து ஒரு நிர்வாகியை நீக்க முடியும்
 
ஆனால் வெறும் வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் ஒரு கட்சி நிர்வாகி நீக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்தக் கூத்து நடப்பது தீபா கட்சியில்தான். தீபா கட்சியில் ஏற்கனவே டிரைவர் ராஜா நீக்கம், கணவர் மாதவன் நீக்கம், டிரைவர் ராஜா மீண்டும் சேர்ப்பு என பல கூத்துக்கள் நடந்துள்ளது தெரிந்தது. இந்த நிலையில் தீபா பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் கோபி அவர்களை வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் கட்சியில் இருந்து தீபா நீக்கியுள்ளார். 
 
இது குறித்து தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட கோபி கூறியதாவது: தீபா என்னை கட்சியில் இருந்து நீக்கிய பின்னர் தான் நான் நிம்மதியாக உள்ளேன். மூன்று வருடம் தீபா பேரவையின் வளர்ச்சிக்காக உழைத்ததற்கு நல்ல வெகுமானத்தை அவர் கொடுத்துவிட்டார். என்னுடைய அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை கொடுத்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் 
 
மேலும் தீபாவை நாங்கள் தான் அரசியலுக்கு அழைத்து வந்தோம். அப்போதே அவர் அரசியலுக்கு வரவில்லை என்று கூறி இருந்தால் நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போயிருப்போம். தற்போது மூன்று ஆண்டுகள் எங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டு தற்போது திடீரென எங்களை நீக்குவது எந்த விதத்தில் நியாயம்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்