திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (15:48 IST)

தங்கம் விலை குறைந்தது: ரூ.30,560க்கு விற்பனை!!

தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து சவரன் ரூ.30,560க்கு விற்பனை ஆகிறது. 
 
கடந்த சில மாதங்களாக விலை உயர்வை சந்தித்த தங்கம் பிறகு மெல்ல பிலை குறைய தொடங்கியது. அதிகபட்சமாக கந்த 13 ஆம் தேதி சவரனுக்கு 1,152 ரூபாய் விலைக்குறைந்த தங்கம் சனிக்கிழமையன்று சவரனுக்கு மேலும் 632 ரூபாய் குறைந்து ரூ.31,472க்கு விற்பனையாகி வந்தது. 
 
இந்நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்தது சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.30,960க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.73 குறைந்து ரூ.3870க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
தற்போது மாலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.30,560க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.123 குறைந்து ரூ.3,820க்கு விற்பனை. 
 
இதேபோல சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.90 குறைந்து ரூ.38.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.