ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 மார்ச் 2021 (11:31 IST)

தமிழகத்தில் இருந்து புதுவை கிளம்பிய நடிகை கெளதமி!

தமிழகத்தில் இருந்து புதுவை கிளம்பிய நடிகை கெளதமி!
நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கெளதமி திட்டமிட்டிருந்தார். ஆனால் ராஜபாளையம் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது என்பதும் அந்த தொகுதியில் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனால் கெளதமி போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இதனை அடுத்து அவர் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தமிழகத்தில் இருந்து புதுவைக்கு பிரச்சாரம் செய்வதற்காக புதுவை சென்றுள்ளார் 
 
சென்னையில் இருந்து புதுவைக்கு ஹெலிகாப்டரில் சென்ற கெளதமி புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. புதுவையில் அவர் சில நாட்கள் பிரச்சாரம் செய்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது