சிபிஐ அதிகாரிகளை தாக்கிய மர்ம கும்பல்: மதுரையில் பரபரப்பு


Bala| Last Updated: சனி, 9 ஏப்ரல் 2016 (11:19 IST)
மதுரை அருகே சிபிஐ அதிகாரிகளை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம். இவர் கேபிள் டீவி இணைப்பு தொழில் செய்து வருகிறார். இவரிடம் மதுரை சுங்கவரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரும் தொடர்புகொண்டு, நீங்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளீர்கள் அதிலிருந்து தப்ப வேண்டுமானால் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம் இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்தார். இதனையடுத்து கண்காணிப்பாளரை கையும் களவுமாக பிடிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி
அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் வரவழைத்து முருகானந்தம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவர்களை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிபிஐ அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று சி.பி.ஐ. அதிகாரிகளை தாக்கி விட்டு வாக்குமூல ஆவணங்களையும் எடுத்து சென்றுவிட்டனர். இதில் பாலசந்திரன், முருகன் ஆகிய அதிகாரிகள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :