ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (21:00 IST)

செப் 21 ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்

உயிர்க்கொல்லி நோயான கொரொனா உலகம் எங்கிலும் பரவி இந்தியாவிலும் அதன்  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 170 நாட்களுக்கு பிறகு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. எனவே  9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது ஆன்லைன் ஆயிலாக பாடம் கற்பிக்கபடுகிறது இந்நிலையில், பள்ளிக்குச் சென்றால் 6 அடி தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.