1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (22:47 IST)

அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரிச்சலுகை: அதிர்ச்சி தகவல்

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு பிரெஞ்ச் அரசு ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமானங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்ற பின்னரே இந்த வரி தள்ளுபடி நடந்ததாக பிரான்ஸ் நாட்டின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வரிச்சலுகை இந்திய பிரதமரின் தலையீட்டால் தான் நடந்துள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்
 
இந்த வரிச்சலுகை குறித்து டெல்லியில் உள்ள பிரான்ஸ் தலைமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பிலாக் நிறுவனத்துக்கும் பிரான்ஸ் நாட்டு வரிவிதிப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சமரச திட்டத்தின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பிரான்ஸ் அரசின் சட்டத்திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்த சமரசம் ஏற்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் எந்த விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தேர்தல் நேரத்தில் வெளிவந்துள்ள இந்த செய்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது