வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (23:08 IST)

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு

Factory
மகிமண்டலம் கிராமத்தில் 300 ஏக்கரில் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு  தெரிவித்து பேச்சு - அதிகாரிகள் அலட்சியமாக செல்போனை பார்த்துகொண்டிருந்தனர். 
 
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் விவசாயிகள் திரளானோர் கலந்துகொண்டனர் இதில் மகி மண்டலம் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் சுமார் 300 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது இதில் விவசாயிகள் தங்களுடைய நிலங்களை சிப்காட்டிற்காக கையகப்படுத்த கூடாது தாங்கள் பல ஆண்டுகள் அப்பகுதியில் விவசாயம் செய்துவருவதாலும் தங்களுக்கு வேறு தொழில் இல்லாததாலும் எனவே தொழிற்பேட்டைகாக எடுத்த இடங்கள் ராணிப்பேட்டையில் அதிகம் உள்ளதால் அங்கு சிப்காட் அமைத்துகொள்ளுங்கள் தங்கள் பகுதிக்கு சிப்காட் வேண்டாம் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .  
 
இதே போன்று ஆறுகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாகவும் அதிகாரிகள் தடுக்கவில்லை ஏரிகள் தூர்வாரப்படவில்லை தூர்வார வேண்டுமென நீர்வரத்து கால்வாய்கள் தூர்வார வேண்டும் வனவிலங்குகள் யானைகள் சிறுத்தைகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கபடுகின்றனர் எனவே இதனை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்