திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (14:08 IST)

நான் கடவுள் எனக் கூறி நாடகமாடிய போலி சாமியார் கைது

பணத்தைக் குறிவைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இக்காலத்தில் பல போலி சாமியார்கள் வலம் வருகிறார்கள்.

இவர்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்  நான் கடவுள் என நாடகமாடிய போலி சாமியாரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மக்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த பூமியில் மனித உருவில் வந்த கடவுள் என்று சொல்லியபடி, பேச முடியாவர்களை பேச வைப்பதாகவும், நடக்க இயலாதவர்களை நடக்க வைப்பதாகவும், நாடகமாடி வந்த செஞ்சி சந்தோஷ்குமார் என்ற போலி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  இவர் தன்னை மகாவிஷ்ணு என்று, தன் இரு மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது.