வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2016 (10:42 IST)

தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு விலகியதாக வாட்ஸ் அப்ல் தகவல் வெளியாகியது

தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுக-வில் இணைந்து விட்டனர் என்று வாட்ஸ் அப்பில் தவறான செய்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறி அக்கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி்யுள்ளது.


 

 
உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகி வருகிறது.
 
சென்னையில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுக-வில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் அப்பிலும் தகவல் வெளியாகியது. இதுதொடர்பான செய்திகள் வாட்ஸ் அப்பிலும் பரவியது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேமுதிக நிர்வாகிகள், தேமுதிக தனித்து போட்டியிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். வாட்ஸ் அப்பிலும், சமூக வலைதளங்களிலும் தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.