1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (10:55 IST)

3ம் சுற்று கலந்தாய்வு முடிந்தும் 50,000 இடங்கள் காலி.. 1 மாணவர் கூட சேராத கல்லூரிகள் இத்தனையா?

பொறியியல் படிப்புக்கான தகுதியில் திடீர் மாற்றம்
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கலந்தாய்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் சமீபத்தில் மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடந்தது. 
 
இந்த நிலையில் தற்போது பொறியியல் படிப்புக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்னும் 50,000 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலம் இருப்பதாகவும் 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாகவும் 61 கல்லூரிகள் 10 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
மொத்தம் 263 பொறியியல்  கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளதால் பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
Edited by  Mahendran