திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (11:16 IST)

அப்பவே ஹிட்லிஸ்டில் இருந்த பாலாஜி? என்கவுண்ட்டர் செய்தால்தான் ரவுடியிசம் குறையும்!- முன்னாள் டிஜிபி ரவி!

DGP Ravi

சென்னையில் பிரபல ரவுடியாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து முன்னாள் டிஜிபி ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

சென்னை பகுதியில் பிரபல ரவுடியாக இருந்து வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை வழக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள நிலையில் விசாரணைக்காக போலீஸார் அவரை கைது செய்ய முயன்றபோது, போலீஸாரை அவர் தாக்கியதால் தற்காப்புக்காக என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

 

சமீபமாக தமிழ்நாட்டில் என்கவுண்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த என்கவுண்ட்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் டிஜிபி ரவி “2006ல் நான் காவல் இணை ஆணையராக இருந்தபோதே காக்கா தோப்பு பாலாஜி எங்களுடைய ஹிட் லிஸ்ட்டில் இருந்தவர்தான். என்கவுண்ட்டர் செய்தால்தான் இதுபோன்ற ரவுடியிசம் குறையும். உத்தர பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் என்கவுண்ட்டர் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு என்கவுண்ட்டர் சாதாரணமாக நடக்கிறது. இது ஒரு பெரிய விஷயம் இல்லை” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K