ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (18:17 IST)

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

assembly
நிர்வாக காரணங்களுக்காகவும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்கியும் அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்றுமுன் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த முழு விபரங்கள் இதோ:
 
1. உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளராகப் பணியாற்றி வந்த ஏ.சுகந்தி ஐஏஎஸ், மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
2. நில சீர்திருத்த துறை இணை ஆணையர் ஆகப் பணியாற்றி வந்த எஸ்.பி.அம்ரித் ஐஏஎஸ், உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
3. ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியர் பி.ரத்தினசாமி ஐஏஎஸ், வர்த்தக வரித்துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
4. தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர் வி.சரவணன் ஐஏஎஸ், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
5. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
6. GUIDANCE செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
7. தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழக செயல் இயக்குநராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
8. சென்னை வர்த்தக வரி, இணை ஆணையர் (உளவுத்துறை) வீர் பிரதாப் சிங் ஐஏஎஸ், ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran