வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (12:56 IST)

சீசனை பயன்படுத்தி போலி நிலவேம்பு பொடி: சுகாதார செயலர் எச்சரிக்கை

தமிழகமே டெங்கு காய்ச்சலால் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் அதிலும் வருமானத்தை பார்க்க ஒருசிலர் முயற்சித்து வருவதாக அதிர்ச்சியான செய்திகள் வெளிவதுள்ளது



 
 
ஆம், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கவும், காய்ச்சல் வந்தவர்களுக்கு நன்மருந்து என்றும் கூறப்படும் நிலவேம்பு கசாயம் தற்போது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலவேம்பு கசாயம் கடைகளில் விற்பனை செய்யப்படும் நிலவேம்பு பொடியை வைத்து தயாரிக்கப்படுகிறது.
 
ஆனால் தற்போது நிலவேம்பு பொடிக்கு அதிகப்படியான தேவை இருப்பதால் இதனை பயன்படுத்தி ஒருசிலர் போலி நிலவேம்பு பொடி தயார் செய்து விற்பனை செய்வதாக தெரிகிறது. போலி நிலவேம்பு பொடியில் கசாயம் செய்து குடித்தால் எந்தவித பலனையும் தராது என்பது மட்டுமின்றி பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் உண்டு
 
எனவே இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் போலி நிலவேம்பு பொடி தயார் செய்வோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.