ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2024 (13:59 IST)

புறவாசல் வழியே பணி - வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம்? - புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்..!!

வேண்டியவர்களுக்கு புறவாசல் வழியாக பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏமாற்றுகிறீர்கள்? என்று புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, 52 துறைகளில் புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாக புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது புதுச்சேரி அரசுக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு, நியாயமான தேர்வை நடத்த முடியாதா என்று கேள்வி எழும்பியது.
 
வேண்டியவர்களுக்கு புறவாசல் வழியாக பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏமாற்றுகிறீர்கள்? என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தி, தகுதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டை பின்பற்றி பணிநியமனங்கள் வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. 

 
சட்ட விரோதமாக பணி நியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது.