திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (12:15 IST)

உலக சாதனை படைத்த திமுக எம்.எல்.ஏ! – 4 மணி நேரத்தில் 1010 சுற்றுகள்!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டில் இருந்தபடியே உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன்.

திமுக சட்டமன்ற உறுப்பினரும், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பவர் மா. சுப்ரமணியன். அரசியல் மட்டுமல்லாது விளையாட்டிலும் தீராத ஆர்வமுடைய மா.சுப்ரமணியன் உலகளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும் வென்றவர்.

ஊரடங்கால் வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முடியாததால் வீட்டு மொட்டை மாடியிலேயே 8 வடிவ வளையம் அமைத்து அதில் ஓடி உடற்பயிற்சி செய்து வருகிறார் மா.சுப்பிரமணியன். இந்நிலையில் 22x15 அடி அளவு கொண்ட வளையத்தில் 4 மணி நேரம் 8 நிமிடம் 18 நொடிகளுக்கு ஓய்வே இல்லாமல் தொடர்ந்து 1010 முறை ஓடி புதிய சாதனை படைத்துள்ளார் மா.சுப்பிரமனியன்.

அவரது இந்த சாதனை ”Asia Book of Records” ல் அங்கீகரிக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.