ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 மார்ச் 2018 (16:39 IST)

திராவிட நாட்டை திமுக கேட்கவில்லை: மு.க.ஸ்டாலின் திடீர் பல்டி

பாஜக ஆட்சி இல்லாத தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் என்பது தெரிந்ததே. ஆந்திராவில் பாஜகவின் கூட்டணி அரசு இருந்தது. ஆனால் தற்போது அதுவும் இல்லை. இந்த நிலையில் தென்மாநிலங்கள் இணைந்த திராவிட என்ற கோரிக்கை மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகிறது.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியபோது, தென் மாநிலங்கள் ஒன்றிணைவதைப் பார்க்கும்போது, திராவிட நாடு கோரிக்கை வலுவடைவதைப்போல் தோன்றுகிறதே என நீங்கள் கேட்கிறீர்கள். இந்த கோரிக்கை ‘வந்தால் வரவேற்கப்படுகிறது. வரும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்’ என்று கூறினார்.

ஆனால் இதுகுறித்து இன்று அவர் கூறியபோது, 'திராவிட நாடு குறித்த திமுக கருத்து கூறியதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. திமுக, திராவிட நாடு கேட்கவோ, குரல் கொடுக்கவோ இல்லை' என்று கூறினார்.

ஒரே நாளில் திமுக செயல்தலைவருக்கு என்ன ஆச்சு என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.