ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (07:27 IST)

சொந்த சின்னம், சீட் அதிகம்.. ஆரம்பித்தது திமுக கூட்டணியில் பிரச்சனை..!

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் அதேபோல் சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறி வருவதை அடுத்து பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். நான்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் திமுக வேட்பாளர்கள் 24 பேர் என்று ஆனது. 
 
ஆனால் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதை அடுத்து கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கூட்டணி கட்சிகள் சொந்த சின்னத்தில் தான் நிற்போம் என்று கூறி வருகின்றன. 
 
குறிப்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தற்போது தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி உள்ளதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் திமுக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால்  கூட்டணி பேச்சுவார்த்தை, மற்றும் தொகுதி உடன்பாட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து விடுவார் என திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva