1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (16:05 IST)

அதிமுக - தேமுதிக கூட்டணி: டாப் கியரில் பிரேமலதா; ரிவர்ஸ் கியரில் விஜயகாந்த் - குழப்பத்தில் தொண்டர்கள்

அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்னமும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாகவே கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 
தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாக கொண்டு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதை தெரிந்துக்கொண்டும் தேமுதிக தலைவர் விஜய்காந்த் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியல் சூழலை பரபரப்பாகவே வைத்துள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக - தேமுதிக கூட்டணி ஏன் இன்னும் உறுதியாகமால் இழுபறியில் உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் நம்பமுடியாத ஒன்றாக இருந்தாலும், இது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
இரண்டு நாட்கள் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில், கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பிரேமலதா சொன்னது போல அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என விஜய்காந்த் கூட்டணி குறித்து கேட்டதும் பதில் அளித்துள்ளனர். ஆனால், விஜய்காந்த் சற்று தீவிரமாக விசாரித்ததும், அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என கூறியுள்ளனர். 
 
மேலும், குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் பரவயில்லை திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம். அது வெற்றி பெறும் கூட்டணி. மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுவதால் அதிமுக கூட்டணி வெற்றி பெறாது. அதிக தொகுதி கிடைக்கிறதே என்று அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் தோல்விதான் மிஞ்சும் என்று கூறியுள்ளனர். 
உண்மையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜயகாந்திற்கும் விருப்பம் இல்லையாம். தனித்து போட்டியிடுவோம் அல்லது திமுகவுடன் கூட்டணி வைப்போம் என்ற நிலைபாட்டில்தான் விஜயகாந்த் உள்ளாராம். ஆனால், அவரது மனைவி பிரேமலதாதான் நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் மும்முறமாக உள்ளாராம். 
 
விஜயகாந்தை எப்படியேனும் இதற்கு சம்மதிக்க வைக்க பல முயற்சிகளையும் எடுத்து வருகிறாராம். தான் இல்லாத நேரத்தில் கட்சி பணிகள் அனைத்தையும் பிரமேலதா சரியாக கவனித்து வருவதால் அவருக்காக இந்த கூட்டணிக்கு ஒப்புக்கொள்வோம் என்ற எண்ணம் விஜய்காந்திற்கு இருப்பதாகவும் தேமுதிக நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.