1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (15:37 IST)

என்னது இரட்டை இலை சின்னத்தில் நிற்கனுமா? மோசம் போன விஜயகாந்த்

தேமுதிக அதிமுக கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இன்று எப்படியும் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் உறுதியாகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக ஏற்கனவே தனது கூட்டணிகளை உறுதி செய்திவிட்ட நிலையில், கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்க வேண்டிட கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதிமுக தேமுதிக கூட்டணிதான் இழுபறியில் உள்ளது. 
 
தமிழக பாஜக தேர்தல் பொருப்பாளர் பியூஸ் கோயல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். 
முதலில் 7 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக நிர்பந்திக்க பின்னர் அது ஐந்தாகி தற்போது நான்கு தொகுதிகள் ஆகியுள்ளது. இந்த 4 தொகுதிகளில் இரண்டு தொகுதி மட்டுமே தேமுதிகவிற்கு தனித்தொகுதி என்றும் மீதமுள்ள இரண்டு தொகுதியில் அதிமுகவின் கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் தேமுதிக போட்டியிட வேண்டும் என்றும் கூறப்படுவதாக் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இதுவரை அதிமுக, பாமகவிற்கு 7 தொகுதிகளையும், பாஜகவிற்கு 5 தொகுதிகளையும், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளையும் ஒதுக்கப்பட்டுள்ளது.