நவம்பர் 25 மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: வைகோ அறிவிப்பு


K.N.Vadivel| Last Modified புதன், 18 நவம்பர் 2015 (01:09 IST)
நவம்பர் 25 ஆம் தேதி அன்று திருச்சியில் மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் வைகோ அறிவித்துள்ளார்.
 
 
இது குறித்து,  மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 12 ஆம் தேதி அன்று மதுரையில் பெரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் கூட்டணியின் அங்கங்களான மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிÞடு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நவம்பர் 25 ஆம் தேதி அன்று திருச்சி மாநகரில் பெமினா ஹோட்டல் கூட்ட அரங்கத்தில் காலை 10 மணி தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :