திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (19:09 IST)

காவல்துறை ஆய்வாளர் சீருடை அணிந்த காங்கிரஸ் பிரமுகரிடம் போலீசார் விசாரணை

manikandan
காவல்துறை ஆய்வாளர் சீருடை அணிந்த காங்கிரஸ் பிரமுகரிடம் போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் காவல்துறை ஆய்வாளர் சீருடை அணிந்து நகர் முழுவதும் வலம் வந்ததை அடுத்து அவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் என்பவர் சமீபத்தில் காவல்துறை ஆய்வாளர் சீருடை அணிந்து நகரின் முக்கிய வீதிகளில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தார்.
 
அவரை பார்த்து உண்மையாகவே காவல்துறை ஆய்வாளர் வந்து விட்டாரோ என்று மக்கள் நினைத்தனர். ஆனால் அவர் காவல்துறை சீருடையில் அணிந்த காங்கிரஸ் பிரமுகர் என்பது பிறகுதான் தெரியவந்தது 
 
இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது