ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (12:12 IST)

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த சில மாதங்களாக சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில் 90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில் அவர் ஜாமினில் வெளியே வருவதற்கும் விசாரணை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும் ஜாமின் கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
மேலும் கெஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பதால் அவருக்கென்று சில உரிமைகள் உள்ளதாகவும், அவரை 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமின் வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
 
Edited by Siva