தீபாவை நோக்கி கத்தியபடியே ஓடிவந்த ஜெ.வின் சமையல்காரர் ராஜம்மா!

தீபாவை நோக்கி கத்தியபடியே ஓடிவந்த ஜெ.வின் சமையல்காரர் ராஜம்மா!


Caston| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (11:52 IST)
கடந்த ஞாயிற்றுக்கிழமை போய்ஸ் கார்டனில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நடத்திய களேபாரங்கள் ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டது. தீபா தனது தம்பி தீபக் மீதும் சசிகலா மீதும் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

 
 
செய்தியாளர்கள் சந்திப்பின் போது தீபா தனது அத்தை ஜெயலலிதாவை பணத்துக்காக தனது தம்பி தீபக்கும், சசிகலாவும் திட்டமிட்டு கொன்றதாக பகீர் குண்டை தூக்கி போட்டார். தீபா இப்படி கூறியதற்கு காரணம் இருப்பதாக தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.
 
தீபா ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனுக்கு சென்றதும் ராஜம்மா என்பவரை பார்த்துள்ளார். இந்த ராஜம்மா போயஸ் கார்டனில் 33 ஆண்டுகளாக சமையல்காரராக இருந்து வருகிறார். தீபாவை சின்ன வயதில் இருந்து இந்த ராஜம்மாவுக்கு தெரியும். இவர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனில் தீபாவை ராஜம்மா பார்த்ததும் கத்தியபடியோ ஏதோ சொல்ல ஓடி வந்துள்ளார். ஆனால், அவரிடம் பேசி விசாரிப்பதற்குள் போயஸ் கார்டனில் இருந்த செக்யூட்டிகள் தீபாவை வெளியேற்றி விட்டார்கள். இவ்வாறு தீபா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
ராஜம்மா வெளியில் வந்து பேசினால்தான் ஜெயலலிதாவின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும் என்பதால் ராஜம்மாவை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது குறித்து தீபா தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :