ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (13:45 IST)

குற்றால சீசன் ஆரம்பம் - தென்காசியில் தென்றல் காற்று வீச துவங்கியது!

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டிலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்று கேரளாவில் தெற்கு பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. 
 
இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்க உள்ளது. கொரொனா சூழலால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் தென்றல் காற்று வீச அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து துவங்கியது. ஒரு வாரத்தில் முழு சீசன் ஆரம்பித்து விடும். இருந்தும் கொரொனா சூழலால் மக்கள் கூடவோ, அருவிகளில் குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.