1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (13:17 IST)

நிர்மலா தேவிக்கு 5 நாள் சிபிசிஐடி காவல் - நீதிமன்றம் அனுமதி

பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் தங்கள் விசாரணைய தொடங்கினர். இதற்காக சிபிசிஐடி தரப்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக, அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி தரப்பில் சாத்தூர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால்,  5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.