ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (18:47 IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழகத்தில் இதுவரை இல்லாதவகையில் அதிகரித்துள்ளதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.  இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2403 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 113865 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில்  இன்று 1219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை  83,357 லிருந்து 84,598 ஆக அதிகரித்துள்ளது.