ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:57 IST)

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி

N Sangaraiyya
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  

விடுதலை போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சளி, காய்ச்சல் இருப்பதால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் சங்கரய்யாவை நேரில் பார்த்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன்  உடன் இருந்து தனது தந்தையை கவனித்து வருகிறார்.  சங்கரய்யா  உடல் நலம் தேறி வருவதாகவும் அவர் விரைவில் நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Edited by Siva