1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (08:22 IST)

6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்கள்: பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

நடப்பு கல்வி ஆண்டு முதல் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளுக்கு தமிழகம் முழுவதும் பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதன் பிறகு அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் அமல்படுத்த படம் என்று கூறப்படுகிறது.  
 
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே இதில் பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இதற்கு முன்னர் பொது தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் ஒரே பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva