திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (18:10 IST)

மாணவரிடம் சாதி குறித்து பேசிய கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்!

suspend
மாணவரிடம் சாதி குறித்து பேசிய கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்!
கல்லூரி மாணவர்களிடம் ஜாதி குறித்து பேசிய பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கல்லூரி மாணவர் ஒருவரிடம், ‘நீ எந்த சாதியை சேர்ந்தவன் என்பது கூட எனக்கு தெரியாது ஆனால் ஒவ்வொரு மூஞ்சியை வைத்து அவன் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்று என்னால் கண்டு பிடிக்க முடியும். என்ன சாதி என்பது அவரவர் முகத்திலேயே எழுதி வைத்திருக்கிறது என்று கூறியதாக குற்றஞ்சாட்டப் பட்டது 
 
இதனையடுத்து அந்த கல்லூரி பேராசிரியை தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை பெயர் அனுராதா என்றும், அவர் பச்சையப்பன் கல்லூரியில் பணி புரிந்தவர் என்பதும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது