வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (09:56 IST)

‘சாதி, மதம் இல்லை’ என சான்று வாங்கிய கோவை தம்பதி.. குவியும் வாழ்த்துக்கள்..!

கோவையை சேர்ந்த தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்ற சான்றிதழ் வாங்கி இருப்பதை அடுத்து அந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 
 
கோவையைச் சேர்ந்த பீனா பிரித்தி மற்றும் பிரலோப் தம்பதியினர் தங்கள் 3 வயது குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என சான்றிதழ் பெற விரும்பி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். 
 
எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை இருந்தால் போதும் என்றும் எங்கள் குழந்தைக்கு ஜாதி மதம் தேவையில்லை என முடிவு செய்து இந்த விண்ணப்பத்தை அளித்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.  
 
சான்று பெற விண்ணப்பித்து அந்த சான்றிதழ் பெறுவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் தற்போது அவர்களுக்கு அந்த சான்றிதழ் கிடைத்துள்ளது.  பள்ளி மாற்று சான்றிதழில் ஜாதி இல்லை, மதம் இல்லை என்று குறிப்பிடவோ அல்லது வினாக்களுக்கு எதிராக இடத்தில் காலியாக விடவோ விரும்பினால் சம்பந்தப்பட்டவரின் விருப்ப கடிதத்தை பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்றிதழ் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை  அடுத்து இந்த சான்றிதழ் இந்த தம்பதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva