திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (13:34 IST)

வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

MK Stalin
வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. மேலும் பழைய வீடியோக்கள் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அமைச்சர் மா சுப்பிரமணியன் உட்பட ஒரு சிலர் தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தாக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும் படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்புவோர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இது என்றும் இதனை நம்மை விட மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களை அழுத்தமாக சொல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஊடகங்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் சமூக பொறுப்பை உணர்ந்து ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran