ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (11:00 IST)

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டலாமா அல்லது ஜாதி கலவரத்தை தூண்டலாமா என ஒரு சிலர் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 
 
நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் ’இன்றைக்கு நாட்டில் பிளவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு சிலர் உளவிக்கொண்டிருக்கின்றனர்.
 
இந்த ஆட்சியை நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, திராவிட மாடல் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்திலே ஒரு கவர்ச்சிகரமான மக்களை கவரக்கூடிய வகையில் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். 
 
தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது என்ற நிலையில் நம் மீது புழுதிவாரி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை எப்படியாவது கலவரம் செய்து ஆட்சியை அப்புற படுத்த வேண்டும் என பல்வேறு திட்டங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran