ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (17:57 IST)

சென்னை, தாம்பரம் கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.. என்ன காரணம்?

சென்னையில், மாநகராட்சி தொழில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் வழக்கம் உள்ள நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல பகுதிகளில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள நிலையில் தற்போது
சென்னை, தாம்பரம் மாநகராட்சியில் தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

குரோம்பேட்டை பகுதியில் தொழில்வரி செலுத்தாத  கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் உடனடியாக வரி செலுத்த, 27 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒருசில கடைகளில் மட்டும் கடையில் பணிபுரிந்தவர்களை வெளியேற்றி விட்டு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva