முக ஸ்டாலின் மருமகன் மீது வழக்குப்பதிவா? பரபரப்பு தகவல்

Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (19:41 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் திமுகவின் சமூக வலைத்தளங்களை கவனித்து கொள்ளும் ஐடி விங் தலைவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறான செய்திகளை சபரீசன் தூண்டுதலின்பேரில் வெளியாகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் திமுக தரப்பில் இருந்து காவல்துறைக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பொருத்தவரை எதிர்க்கட்சிகள் உண்மையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதை விட இந்த விவகாரத்தை வைத்து அதிமுகவின் செல்வாக்கை குறைத்து அரசியல் லாபம் தேடவே அதிகம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. உண்மையாகவே குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற அக்கறை இருந்திருந்தால் கமல்ஹாசன் போல் திமுக தரப்பினர் காவல்துறையினர்களிடம் புகார் அளித்திருப்பார்கள் என்றும் அதனை செய்யாமல் சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்பி வருவதால் திமுகவின் மீது சந்தேகம் ஏற்படுவதாகவும் நெட்டிசன்களில் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :