ஜெயலலிதா நினைவு இல்லத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: நீதிமன்றம் உத்தரவு

veda illam
ஜெயலலிதா நினைவு இல்லத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
siva| Last Updated: புதன், 27 ஜனவரி 2021 (18:18 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் இன்று திறக்கப்பட்ட நிலையில் அந்த நினைவகத்தை பார்வையிட லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டனில் வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது

இருப்பினும் நினைவு இல்லமாக மாற்றப்பட்ட ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வேதா நிலையட்தை கையகப்படுத்தியதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகன்
தீபக், அண்ணன் மகள் தீபா ஆகியோர் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :