தொடர்ந்து கனமழை டார்கெட்டில் சென்னை! – அவசர எண்கள் அறிவிப்பு!

சென்னையில் விடிய விடிய மழை:
Prasanth Karthick| Last Modified வியாழன், 29 அக்டோபர் 2020 (10:38 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மழை பாதிப்பு அதிகரித்து வருவதால் அவசர தொடர்பு எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியிருந்தாலும் தொடக்கமே நல்ல மழையை சந்தித்து வருகிறது தமிழகம். நேற்று சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகள் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் மரங்கள், சுற்று சுவர்கள் பெயர்ந்து விழுந்து சேதாரம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்குதல், நோய் அபாயங்கள் ஏற்படும் என்பதால் இதுகுறித்து புகார் அளிக்க அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி புகார்களை 044-2538 4530, 044-2538 4540 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். மேலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மைய எண் 1913க்கு அழைத்தும் புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :