பெண் எம்.எல்.ஏ வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

Last Modified செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:35 IST)
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள திமுக பெண் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வீடு மற்றும் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நடத்தி வரும் நிறுவனத்திற்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்ற புகார் சமீபகாலமாக எழுந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக ஜிஎஸ்டி அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சோதனை முழுவதும் முடிந்தபின்னர் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :