திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (11:49 IST)

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..!

காவிரி டெல்டாவில் உள்ள மூன்று பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 
 
மத்திய அரசு இந்த அறிவிப்பு கண்டனத்துக்குரியது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவேரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது என்று சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கூறினார். 
 
இந்த நிலையில் காவிரி டெல்டாவில் புதிதாக மூன்று நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதிபடக் கூடிய நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தினை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran