ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (15:51 IST)

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக் குட்டி... மக்கள் ஆச்சர்யம் !

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள கிராமம் மீனவேலி. இங்கு வசிப்பவர்  சுப்புரா. இவர் அப்பகுதில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வரும் பசுமாடு இன்று ஒரு கன்று ஈன்றது.
அதனல சுப்புராவின் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். ஆனால் அந்தக் கன்றுக் குட்டிக்கு 2 தலை மற்றும் 4 கண்கள், இரண்டு மூக்குகள் இருப்பதைப் பார்த்து அவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த அதிசயக் கன்று குறித்து கிராம மக்களுக்கு தகவல்  தெரியவே அனைவரும் சுப்புராவின்  வீட்டுக்கு வந்து கன்றைப் பார்த்துச் சென்றனர் . பின்னர், இந்தக் கன்று குறித்து மக்களுக்கு கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது மருத்துவர் கன்றுக்கு சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.