ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (08:16 IST)

உள்ளாட்சி தேர்தல் - விருப்ப மனு அளிக்க துரைமுருகன் அழைப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு. 

 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர்  9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதனால் இன்று முதல் மனுத்தாக்கல் துவங்கும்.