ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (23:31 IST)

ஆன்லைன் விளையாட்டிற்கு தடை! எங்கு தெரியுமா?

உலகம் முழுவதும் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் மூழ்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,  சீனா தேசத்திலும் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிப்போகும் அபாயம் உள்ளதாலும் அவர்களின் கல்வி பாதிகப்படும் என அச்சத்தாலும் சீனாவில் 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் இனிமேல் ஒரு நாளில் ஒரு மணிநேரம் மட்டும்தான் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட முடியும் எனக் கூறியுள்ளது.