வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (20:25 IST)

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: 21 தொகுதிகள் காலி, பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.   
 
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின மீதான் தீர்ப்பு வெளியானது. அதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
3 ஆண்டுகள் தண்டனை என்பதால் அவரது அமைச்சர் பதவியும் ஓசூர் எம்எல்ஏ பொறுப்பும் பறிபோகும். ஆனால், தற்போதைக்கு இந்த தீர்ப்பு நி்றுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டியும் இந்த தீர்ப்பு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துவிட்டு வந்தார். 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிச்சாமி பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா கடிதத்தை அளுநருக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
 
ஏற்கனவே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்த அந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், திருவாரூர் மற்றும் திருபரங்குன்றம் இடைத்தேர்தலும் பெண்டிங்கில் உள்ளது. தற்போது பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்துள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது 21 தொகுதிகள் காலியாக உள்ளது.