பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2021 (16:13 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்.  
 
2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் ஞானதேசிகன். பின்னர் இவர் தமிழ் மாநில காங்கிரஸுக்கு சென்றார். அங்கு அவருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. 
 
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஞானதேசிகன் சென்னை அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி காலாமானார். இந்த செய்தி தமாகா தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இவரது மறைவிற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :