திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (11:38 IST)

கனிமொழிக்கு 50, அருண் நேருக்கு 32.. குவியும் விண்ணப்பங்கள்..!

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. 
 
குறிப்பாக கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் திமுக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்க வரும் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் தங்கள் தொகுதியில் பிரபலங்கள் போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று 50 பேர்கள் வரை விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளதாகவும் அதேபோல் அமைச்சர் கே என் நேரு மகன் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்று 32 விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இந்த நிலையில் பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட இதுவரை 32 பேர் விண்ணப்பங்கள் மனுக்கள் அளித்துள்ளதால் அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran