வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (14:39 IST)

குறை கூறிய தமிழ்நாடு அரசுக்கு ரூ.42,000 கோடிக்கான முதலீடு கொடுத்தவர் அதானி: அண்ணாமலை

Annamalai
தமிழ்நாடு அரசு அதானியை குறை கூறிக் கொண்டு இருந்த நிலையில் அதானி நிறுவனம் தமிழகத்தில்  ரூ.42,000 கோடிக்கான முதலீடுகளை கையெழுத்திட்டுள்ளது என 
சென்னை தியாகராய நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் மேலும் பேசியதாவது:
 
தமிழ்நாட்டின் முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி அடைய வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்துக்கள் சொன்னேன். தற்போது தமிழ்நாடு அரசு ரூ.6.6 லட்சம் கோடி முதலீடுகளை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தமிழ்நாடு அரசை பாராட்டுகிறோம், இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தமிழ்நாடு அரசு இன்னும் குறிக்கோளை உயர்த்தி உழைக்க வேண்டும்;

 
என் மண் என் மக்கள் யாத்திரையில் நாங்கள் அறிந்துக் கொண்டது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. உலகில் இருக்கும் அனைத்து பெரிய முதலீட்டாளர்களும், இந்தியாவை அதிக வருவாய் கொடுக்க நாடாக பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி சொல்லி இருந்தார். 
 
குஜராத் மாநிலத்தில் நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பே ரூ.7 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டது’ என்று அண்ணாமலை பேசினார்.
 
Edited by Mahendran