நீட்டால் உயிரிழந்த அனிதாவின் தங்கை பிலிப்பைன்ஸ் சென்று மருத்துவப் படிப்பு!

Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (10:09 IST)

நீட் நுழைவுத்தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் தங்கை பிலிப்பைன்ஸ் நாடு சென்று மருத்துவப் படிப்பு படிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வால் அநியாயமாக தனது மருத்துவக் கனவை பலிகொடுத்த அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தது. இருப்பினும் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்க முடியவில்லை.

இந்நிலையில் அவரின் தங்கை ஒருவர் இப்போது மருத்துவம் படிப்பதற்காக பிலிப்பைன்ஸ் செல்ல உள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் வெளியிட்டுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :