அமித்ஷா சிபாரிசு... ஆட்சியும் கட்சியும் ஓபிஎஸ் கைக்கு மாற்றம்?

admk
Last Modified புதன், 14 ஆகஸ்ட் 2019 (14:22 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி மற்றும் கட்சி பொறுப்புகளை கவனிக்க உள்ளார் என தெரிகிறது. 
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு வாரங்களுக்கு இந்த சுற்றுப்பயணம் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு வார காலத்தில் ஓபிஎஸ் கட்சி மற்றும் ஆட்சி பொறுப்பகளை கவனிப்பார் என தெரிகிறது. 
 
ஆம், சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அமித்ஷாவிடமும் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாம். இந்த ஆலோசனையின் முடிவில் அமித்ஷாவும் ஓபிஎஸ்-க்கு பலமான சிபாரிசை வழங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
ஆனால், முதல்வருக்கு இதில் துளியும் ஒப்புதல் இல்லை எனவும் கூறப்படுகிறது. இரண்டு வாரம் என்றாலும், ஓபிஎஸுக்கு முழு அதிகாரத்தை கொடுக்க ஈபிஎஸ் விரும்பவில்லையாம். 
 
ஏற்கனவே இரட்டை தலைமை என அதிமுகவில் அதிருப்திகள் நிலவி வரும் நிலையில் இப்போது ஆட்சியை ஓபிஎஸ் கையில் கொடுத்தால் திரும்பி வருவதற்குள் ஏதேனும் ஆபத்து வருமோ என்ற சந்தேகத்தில் ஈபிஎஸ் தரப்பினர் உள்ளார்களாம். 


இதில் மேலும் படிக்கவும் :